திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தில் (இகணபாக்கம்), காரிய சித்தி கணபதி, ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், சங்கடகர சதுர்த்தி அன்று சங்கடங்களை நீக்கி நிவாரணம் அளிக்க ஹோமம் சிறப்பாக நடத்தப்படுகிறது.நாளை (23ம் தேதி) சங்கடகர சதுர்த்தி அன்று காலை காரிய சித்தி கணபதி கோவிலில் காலை 9:00 மணிக்கு, சங்கட நிவாரண ஹோமம் துவங்கி, மதியம் 2:00 மணி வரை நடைபெறுகிறது. மதியம் 1:30 மணிக்கு, மகா தீபாராதனையும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.