கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே எஸ்.பி.நத்தம் ஊராட்சி எஸ்.பெருமாள்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன் தினம் மகா கணபதி ஹோமம், முதலாம் கால பூஜை, கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தல் பூஜை நடந்தது. நேற்று காலை காப்பு கட்டிய மக்கள் பால்குடம் எடுத்தனர். 2ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து கோபூஜை நடந்தது. மகாகும்பாபிஷேகம் முடிந்தபின் அன்னதானம் நடந்தது. கடம்பவன மீனாட்சி கோயில் அர்ச்சகர் பிரகாஷ் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஊராட்சித் தலைவர் ஜோதி தலைமையில் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.