ஊத்துக்கோட்டை:எருக்குவாய் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 26ம் தேதி, நடைபெற உள்ளது. ஆரணி அடுத்த, எருக்குவாய் கிராமத்தில் உள்ளது செல்லியம்மன் கோவில். இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. கிராம மக்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது பணிகள் முடிந்து, வரும் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.