இளையான்குடி: இளையான்குடி அருகே கல்லுாரணி செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஜூன் 21 ல் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை நடந்தன. காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப் பட்டது. நயினார்கோயில் நாகநாதர் சுவாமி கோவில் லட்சுமண பட்டர், குமார ராஜசிவம்பட்டர் செய்தனர்.