பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
12:06
நென்மேலி: ஒரத்துார் கிராமத்தில், பொன்னியம்மன், முத்து மாரியம்மன் கோவில்களில் நேற்று, கோலாகலமாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, ஒரத்துார் கிராமத்தில், பொன்னியம்மன், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 12 ஆண்டு களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கடந்த, சில மாதங்களுக்கு முன், பொன்னியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த கோவில்களில், 22ம் தேதி, கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர் ஜீவரத்தினம், முத்து மாரியம்மன் கோவில் உபயதாரர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், ஒரத்துாரை சுற்றியுள்ள கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.