கடலுார்: கடலுாரில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடலுார் வில்வநகரில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21ம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கோ பூஜை, தனபூஜை, ரக்ஷா பந்தனம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு நடந்தது. கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.