நாகர்கோவில் : நாகர்கோவில் நாகராஜாகோயிலில் கடைசி ஞாயிறு விழாவை யொட்டி, காலை முதலே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டு நாகராஜாவை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கோயில் வந்து தங்கள் நேர்ச்சை கடனை செலுத்தி, கோயிலில் உள்ள சாஸ்தா தெய்வங்களுக்கு பால் வார்த்தும், தங்கள் நேர்ச்சை கடனை செலுத்தியும் வருகின்றனர். ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் ஆவணி கடைசி ஞாயிற்றுகிழமை நேற்று நடந்தது. இதனையொட்டி பொதுப்பணித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவை யொட்டி காலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. 11மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. 11.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. பகல் 12 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அத்தாளபூஜை தொடர்ந்து சுவாமி பவனி வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி, காலை முதலே பக்தர்கள் கோயில் வந்து நாகர்சிலைகளுக்கு பால்ஊற்றி வழிப்பட்டனர். மஞ்சள்பொடி இட்டும், தங்கள் கஷ்டங்கள் தீர வேண்டிகொண்டனர். ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் யாதொரு அசம்பாவிதசம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.