மதுரை: மதுரை அருகே ஒத்தக்கடை நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் அன்னதானத் திட்டத்தை நேற்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை அரசமரப் பிள்ளையார், வீரராகவப் பெருமாள், குருவித்துறை குருபகவான், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களிலும் நேற்று அன்னதானம் துவங்கியது.