பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
பென்னலுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் கிராமத்தில் சிதிலமடைந்து இருக்கும், சிவன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது என, கூறப்படுகிறது. இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.கடந்த, 10 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த சிவ பக்தர்கள், சிதிலமடைந்த இடத்தில் பூஜைகள் செய்து, வழிபட்டு வந்தனர். இந்நிலையில், கோவை, அன்னுார் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி தொண்டு அமைப்பினர், இக்கோவிலை புதுப்பிக்க, நன்கொடை வழங்கியுள்ளனர். அதன் படி, கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி, மே மாதம் 2ம் தேதி துவக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலில் இருந்து அகற்றப்பட்ட, கற்களின் மீது வரிசை எண்கள் எழுதி பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. பின், இந்த கற்களை, இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்து, கோவில் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.
சிலைகள் திருட்டு: கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பென்னலுாரில் குடியிருப்புகள் இல்லாத போது, புதர்கள் மண்டி கிடந்த, இக்கோவிலில் இருந் த, விநாயகர், ஆனந்தவல்லி அம்பாள், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்கை அம்மன், பைரவர், முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சி லைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.