ஆனி திருமஞ்சன விழாவில் அன்னதானம் செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2016 11:07
சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசனத்தையொட்டி அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: சிதம்பரம் நடராஜர் ÷ காவில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி வரும் 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி மகா தரிசன உற்சவமும் நடக்கிறது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையில் முன் அனுமதி பெற்று, நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபனிடம், அன்னதானம் குறித்து பதிவு செய்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர் தொடர்பு எண் 97895 41853 ஆகும். அன்னதானம் செய்பவர்கள் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் இடங்கள் துாய்மை யாக இருக்க வேண்டும். உணவு தயாரிப்புக்கு குடிநீர் தரமான பொருளை பயன்படுத்த வேண்டும். உணவை சூடான நிலையில் வழங்க வேண்டும். ஈ மற்றும் துாசு படியாமல் தகுந்த பாதுகாப்புடன் அன்னதானம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் ஆய்வுக்காக அன்னதானம் செய்வோர், உணவுகளை மாதிரிக்கு எடுத்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி தவறு ஏற்பட்டால், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.