திருவண்ணாமலை: போளூரில், 45 அடி உயர ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி?ஷகம் தமிழ் முறைப்படி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், 45 அடி உயரமுள்ள ராமபக்த ஆஞ்சநேயர் சிலை நிறுவி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சிலை தற்போது வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, நேற்று தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம், முதல் கால வேள்வி பூஜையும், நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, இரண்டாம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோவை திருப்பேரூர் மணிவாசகர் அருட்பணியாளர் சென்னியப்பனார் தலைமையில், மணிவாசக அருட் பணியாளர் குமரலிங்கம் தமிழில் வேத மந்திரம் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.