பதிவு செய்த நாள்
04
ஜூலை
2016
11:07
வடமதுரை: தென்னம்பட்டி மலைப்பாறையின் அமைந்துள்ள சவடம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர், நந்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை கிராம தெய்வ வழிப்பாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் முடிந்ததும் குடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் சவடமுத்து, ஊராட்சி தலைவர்கள் வடிவேல், ராமசாமி பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சுப்பையன், பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.