காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பகுதியில் விவசாயி வீட்டு தோட்டத்தில் பழமையான சுவாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டது காரைக்கால் திருநள் ளார் அகலகண்ணு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம். விவசாயி. இவரது தோட்டத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. அப்போது, திடீரென பலமான சத்தம் கேட்டுள்ளது. கவனமாக பள்ளம் தோண்டிய போது, 4 கிலோ மதிப்பில் பழக்கால சுவாமி சிலைகள், தகடுகள் மற்றும் ஆபரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் கொடுத்த தகவலில் பேரில், திருநள்ளார் தாசில்தார் முத்து,வருவாய்த்துறை அதிகாரி தண்டபாணி உள்ளிட்ட அதிகாரிகள் சுவாமி சிலை கிடைந்த இடத்திற்கு விரைந்தனர். கிடைத்த அனைத்து சிலைகளையும், சார்பு ஆட்சியர் கேசவன் முன்னிலையில் ஒப்படைந்தனர். பின்னர் தொல்பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆய்வுக்கு பின்னரே சிலைகளின் மதிப்பு தெரிய வரும்.