திருத்தணி:நாததீஸ்வரர் கோவிலுக்கு, 1.75 கிலோ எடையுள்ள வெள்ளி நாகாபரணம் நேற்று வழங்கப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவிலான நாததீஸ்வரர் கோவில் பள்ளிப்பட்டு அடுத்த, கரீம்பேடு பகுதியில் உள்ளது. இக்கோவிலுக்கு, சித்துார் கனரா வங்கியின் சார்பில், 71 ஆயிரம் மதிப்புள்ள, 1.75 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி நாகாபரணம் வழங்கல் நிகழ்ச்சி, நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நடந்தது. கனரா வங்கியின் மேலாளர் பொன்னுசாமி, வெள்ளி நாகாபரணத்தை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் ஆகியோரிடம் வழங்கினர். அதற்கான ரசீதையும் கோவில் நிர்வாகம், வங்கி மேலாளரிடம் நேற்று மாலை வழங்கப்பட்டது.