பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
11:07
மணவாள நகர்;மணவாள நகர், கன்னியம்மன் கோவிலில், வரும், 8ம் தேதி, ஜாத்திரை திருவிழா துவங்க உள்ளது. திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரில் உள்ள அண்ணாநகரில் உள்ளது, கன்னியம்மன் கோவில். இந்த கோவிலில், 47ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா, வரும், 8ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும், மறுநாள் (9ம் தேதி) காலை, 7:00 மணிக்கு, பக்தர்கள் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜாத்திரை திருவிழா, 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கி, தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மதியம், 1:30 மணிக்கு சப்த கன்னி பூஜையும், மாலை, 7:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில், அம்மன் வீதியுலாவும் நடைபெறும். பின், 17ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிற்பபு அபிஷேகமும், விடையாற்றி வீதிஉலாவும் நடைபெறும்.