பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
11:07
பாகூர்:பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி, விநாயகர், சண்டிகேஸ்வரர், மூலநாதர், வேதாம்பிகை, சுப்ரமணியர் ஆகியோருக்கு காலை 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு பிரதோஷ நாயனார் நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.