பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
11:07
பொள்ளாச்சி: கேரளா, வண்ணாமடை பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது. கேரள மாநிலம், சித்துார் தாலுகா - வண்ணாமடையில் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்த மே 17ல் நன்னீராட்டுப்பெருவிழா நடந்தது. பேரூராதீனம், கவுமாரமடாலய குமரகுருபர அடிகள், மருதாசலஅடிகள் ஆகியோர் தலைமை வகிக்க, சித்துார் ஸ்ரீசிதம்பரசிவாச்சாரியார் முன்னிலையில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தன. தினம் ஒரு பக்தி சொற்பொழிவு, அன்னதானம் வழங்கலுடன் நேற்று இப்பூஜை நிறைவடைந்தது. முன்னதாக, பூஜைகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கோவிலில் அன்னதானமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.