பதிவு செய்த நாள்
14
செப்
2011
11:09
கடலூர்:கடலூர் வில்வ விநாயகர் மற்றும் கோண்டூர் கற்பக விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.கடலூர், பழைய வண்டிப்பாளையம், வில்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹýதி, தீபாராதனை நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால பூஜை நடக்கிறது. நாளை 15ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 10.35 மணிக்கு கடம் புறப்பாடு, 11 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வீதியுலா நடக்கிறது.கோண்டூர்: டி.என்.சி. எஸ்.சி., நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் நடக்கிறது. நாளை (15ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடு, 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.