பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2011 11:09
திருத்துறைப்பூண்டி: தமிழக கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம் தொடக்க விழா நடந்தது. தமிழகம் முழுவதும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் கோவில்களில் துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அன்னதான திட்டத்தை எம்.எல்.ஏ., உலகநாதன் துவக்க வைத்தார். இதில் திருவாரூர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, நகர செயலாளர் சண்முகசுந்தர், யூனியன் தலைவர் தமிழ்ச்செல்வி, நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.