பதிவு செய்த நாள்
11
ஜூலை
2016
12:07
மோகனூர்: காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், விநாயகர், மாயவர், நாகம்மாள், காமாட்சியம்மன், பெரியசாமி, மதுரைவீரன் ஆகிய கோவில்களில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் ஏற்பட்டது. திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. காலை, 6.15 மணிக்கு, விநாயகர், மாயவர், நாகம்மாள், காமாட்சியம்மன், பெரியசாமி, மதுரைவீரன்காமாட்சி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு, மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.