அன்னுார்: அன்னுார் அருகே உள்ள கரப்பாளையம்புதுார், செல்வ விநாயகர் கோவிலில், அரச மரத்தடி பிள்ளையார், தென்முக கடவுள், அண்ணாமலையார், துர்க்கையம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா நேற்று தீர்த்தம் எடுத்து வருதலுடன் துவங்கியது. இன்று (14ம் தேதி) காலை 6:00 மணிக்கு இறைத் திருமேனிகளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அவிநாசி வாகிசர் மடம், ஏகாம்பரநாத சாமிகள் அருளுரை வழங்குகிறார். மதியம் அன்னதானம் மற்றும் இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது.