திருக்கோவிலூர்:ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தில் விநாயகர், அம்மச்சார், முத்துமாரியம்மன், எல்லைபிடாரி அம்மன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேகம் கடந்த 11ம் தேதி நடந்தது. காலை 6 மணிக்கு கோபூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல், விசேஷ திரவிய ஹோமங்கள், பூர்ணாஹூதி, யாத்ராதானம் கடம் புறப்பாடாகி மூல கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.ரமண சாஸ்திரி குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.