பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
12:07
அனுப்பர்பாளையம்: திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவிலில், ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில், பிரசித்தி பெற்ற திருமுருகநாதர் கோவில் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கோவில் தங்கி, வழிபட்டால், குணமாவதாக ஐதீகம். இதற்காக, பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து, வழிபடுகின்றனர்.அவ்வாறு தங்கும், பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்ய, பேரூராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 8.5 லட்சத்தில், ஓய்வறை, ரூ. 14 லட்சத்தில், சுகாதார வளாகம்; ரூ. 8.5 லட்சத்தில், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, ரூ. 4.5 லட்சத்தில், பூங்கா சுற்றுச்சுவர் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. இதில், பூங்கா சுற்றுச்சுவர் மற்றும் பக்தர் ஒய்வறை கட்டும் பணி, முடிவடையும் வருவாயில் உள்ளது. பேரூராட்சி அதிகாரி கூறுகையில், ‘அடுத்ததாக, சுகாதார வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்படுகிறது. பணிகளை வேகமாக முடித்து, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்றார்.