கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2016 12:07
கோவிந்தவாடி: குரு பெயர்ச்சி விழாயொட்டி, அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம், கோவிந்தவாடி அகரம் தட்சிணாமூர்த்தி கோவிலில் நேற்று நடந்தது. ஆகஸ்ட் 2ம் தேதி, சிம்ம ராசியில் இருந்து குரு, கன்னி ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். அந்த நாளில், இந்தக் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வர். அதற்கான ஏற்பாடுகளை தீர்மானிப்பதற்காக, நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். தட்சிணாமூர்த்தி கோவில் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் குமரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
*தற்காலிக கழிப்பறை வசதி, 20 இடங்களில் ஏற்படுத்தப்படும் *தனியார் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும். *முக்கிய இடங்களில், கூடுதலாக நான்கு கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் இரண்டு இடங்களில் கண்காணிப்பு ’டிவி’கள் பொருத்தப்படும் *தீயணைப்பு, 108 அவசர ஆம்புலன்ஸ், காவல் துறை பாதுகாப்பு ஆகிய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்படும். *நான்கு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட உள்ளது.