செந்துறை: செந்துறை அருகே நல்லபிச்சான்பட்டியில் புனித உத்திரிய மாதா ஆலய திருவிழா நடந்தது. கடந்த ஜூலை 14 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆடம்பர பாடல் மற்றும் கூட்டுத்திருப்பலி மறைமாவட்ட பொருளாளர் அட்டானிஷ் தலைமையில் நடந்தது. பக்தர்கள் நேற்று வேண்டுதல் பொங்கல் வைத்ததையடுத்து தேர்ப்பவனி நடந்தது. தொடர்ந்து பாதிரியார் போர்ஜியோ தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. நாளை பொதுப்பொங்கல் வைத்து வாண வேடிக்கையுடன் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை சமபந்தி விருந்து நடைபெறும்.