*மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் (பணம்)காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. *உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். *மனிதனின் நிலை எப்படி இருக்கிறதெனில், அவனுடைய இறைவன் அவனைக் கண்ணியப்படுத்தி அருட்கொடைகளையும் வழங்கினால், என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று கூறுகிறான். மேலும், அவனை சோதிக்க நாடினால், மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால், என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகிறான். இந்த வசனங்கள் மூலம், பணத்தால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதும், மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, துன்பம் வரும் போது, இறைவன் மீது பழி போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது தெரிய வருகிறது. பணத்தின் மீதான பற்றை குறைத்துக் கொண்டால், பல பிரச்னைகளில் இருந்து தப்பி விடலாம்.