Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சென்னையில் ஷீரடி பாபாவின் பொக்கிஷம்! சென்னையில் ஷீரடி பாபாவின் பொக்கிஷம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க.. அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2016
05:07

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க ஆடி, சுந்தரராஜ பெருமாள் தேர் அசைந்து வலம் வந்தது.

Default Image
Next News

இக்கோயில் ஆடித் திருவிழா, ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அன்ன வாகனத்தில் புறப்பட்டார் பெருமாள். தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அனுமார், கருடன், சேஷம், குதிரை வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளிய பெருமாள் கோயிலை வலம் வந்தார். முக்கிய விழாவான தேரோட்டம் காலை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூமா தேவியுடன் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 8.30 மணிக்கு தேருக்கு தீபாராதனை நடந்தது. நாட்டார்கள் வெண் கொடி வீச பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி, அசைந்து வலம் வந்த தேர் காலை 10.45 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. கலெக்டர் வீரராகவ ராவ், தென் மண்டல ஐ.ஜி., முருகன், தலைமையிடத்து துணை கமிஷனர் ராஜராஜன், தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar