பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016
02:07
திருத்தணி: துர்க்கையம்மன் கோவிலில், நேற்று, ஆடி மாத உற்சவத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகர் நல்ல தண்ணீர்குளம் அருகில் உள்ளது துர்க்கையம்மன் கோவில். இக்கோவிலில் ஆடி மாதம் ஓட்டி, தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சள் காப்பு காலையிலும், சந்தன காப்பு மாலையிலும் நடக்கிறது. அந்த வகையில், நேற்று, முதல் செவ்வாய்க்கிழமை என்பதால், காலையில் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில், திருத்தணி நகர பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடி மாதம் முழுவதும், தினமும் இரு வேலை பூஜைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும்.