மஞ்சூர்: மஞ்சூர் அருகே கீளூர் மாரியம்மன் கோவில் விழா சிறப்பாக நடந்தது. மஞ்சூர் அடுத்துள்ள கீளூர் மாரியம்மன் கோவில் செல்லும் பாதையில், தனி நபர் ஒருவர் பாதையை மறித்ததாக, அப்பகுதி மக்களுக்கும், தனிநபர் ஒருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. ரூரல் போலீசார் மற்றும் ஊட்டி ஆர்.டி.ஓ., வுக்கு புகார் சென்றதை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில்,’கோவில் விழாவில் எந்த வித இடையூறும் ஏற்படுத்த கூடாது’ என, தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கிராம மக்கள் கோவில் நடை திறந்து நேற்று விழாவை சிறப்பாக நடத்தினர்.