திருப்பூர்: திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னம் பாலிப்பு (அன்னதானம்) விழா நடைபெற்றது. சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். காலை, 11:00 மணிக்கு, அகவல் பாராயணம் நிகழ்ச்சியும், ஒளி வழிபாடும் நடைபெற்றது. பங்கேற்ற அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, பொருளாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னாள் செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.