பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
12:07
கோவை: கோவை, காளப்பட்டி நேரு நகரில் அமைந்துள்ள, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நடந்த பக்தி சொற்பொழிவில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், கஜேந்திரமோட்சம் என்ற தலைப்பில் பேசியதாவது:ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது, கஜேந்திரமோட்சம். புரந்தரதாசர், கபீர்தாசர், தியாகராஜர் என மகான்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக, அதற்கான கீர்த்தனைகளை வடிவமைத்துப் பாடியுள்ளனர். கம்ப ராமாயணத்தில், ஆறு காண்டங்களிலும், கம்பர், கஜேந்திர மோட்சத்தை, வெவ்வேறாக பிரித்து பொருள் படுத்தியுள்ளார். தண்ணீரில் உள்ள முதலையிடம் யானை அகப்பட்டுக்கொண்டது. தண்ணீரில் முதலைக்கு பலம், நிலத்தில் யானைக்கு பலம், அப்போது ஆதிமூலமே என்னை காப்பாற்று என்று யானை அலறியதும், சுவாமி நாராயணன் காப்பாற்றுகிறார்.நம் உடலில் உள்ள பஞ்சேந்திரியம் என்ற முதலையிடம், இல்லறக்கடலில் அகப்பட்டுள்ளோம். நம்மை நாம் நல்வழிப்படுத்திக்கொண்டு, பகவானை அடைய நாமும், யானையை போன்று, பகவானை துதிக்க வேண்டும். அப்போது நமக்கு நல்வழி பிறக்கும், வாழ்க்கை சிறக்கும். இவ்வாறு கல்யாணராமன் பேசினார். இன்று, பிரகலாத சரித்திரம் குறித்து, மாலை 6:00 மணிக்கு துவங்கி, 8:00 மணி வரை, திருச்சி கல்யாணராமன், சொற்பொழிவாற்றுகிறார்.