பதிவு செய்த நாள்
23
ஜூலை
2016
02:07
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது. அதிகாலை முதல் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அம்மனுக்கு நெய்விளக்கு, எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
நாகமுகுந்தன்குடி சவுந்தரநாயகிஅம்பிகா சமேத நாகநாதர் கோயிலில் காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அர்ச்சகர் முத்துபிரகாஷ் பட்டர் பூஜைகளை செய்தார். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
காரைக்குடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பாலாபிஷேகம், பன்னீர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பச்ச மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் அபிஷேகம் நடந்தன. ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலதண்டாயுதம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் செல்வி செய்திருந்தார். வ.சூரக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 290 விளக்கு பூஜை நடந்தது.