பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
12:07
மேட்டூர்: டெல்டா மாவட்ட மக்கள், ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட, மேட்டூர் அணையில் இருந்து, நேற்று வினாடிக்கு, 5,000 கனஅடி நீர்திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக காவிரியில் வினாடிக்கு, 2,000 கனஅடி நீர்திறக்கப்பட்டுள்ளது. ஆக.,2 ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் நீர்திறக்க கரையோர மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், ஜூலை, 25 முதல் காவிரியாற்றில் கூடுதலாக, 3,000 கனஅடி நீர்திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை, 7 மணி முதல் வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் அணை சுரங்க மின்நிலையம் வழியாக காவிரியில் திறக்கப்பட்டது. சேலம் கலெக்டர் சம்பத் தண்ணீரை திறந்து வைத்தார். நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 56.75 அடியாகவும், நீர்இருப்பு, 22.32 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. வினாடிக்கு, 6,155 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.