ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2016 01:07
கடலூர்: கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் பிரம்மோற்சவ விழா நாளை 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்குகிறது. கடலூர், முதுநகரில் அமைந்துள்ள ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி இன்று 27ம் தேதி மாலை விநாயகர் பூஜையும், நாளை 28ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 4ம் தேதி இரவு கரக உற்சவமும், 5ம் தேதி காலை முதல் செடல் உற்சவமும், இரவு ரத உற்சவமும், 6ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7ம் தேதி தெப்பல் உற்சவம், 8ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 9ம் தேதி விடையாத்தி உற்சவமும் நடக்கிறது.