திரவுபதி அம்மன் கோவிலில் 29ம் தேதி தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2016 01:07
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர், திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 29ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், ÷ தரடி வீதி – போடிசெட்டித் தெரு சந்திப்பில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. தொடர்ந்து தினமும் மகாபாரதம் சொற்பொழிவு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. கடந்த 24ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடும் ஐதீக உற்சவம் நடைபெற்றது. இன்று மாலை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் வீதியுலாவும், நாளை (28ம் தேதி) மாலை கரகத் திரு விழா மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 29ம் தேதி மாலை தீமிதி திருவிழாவும், இரவு அம்மன் வீதியுலாவும், 30ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.