பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
11:07
வேலுார்: தமிழக-த்திடம் இருந்து ஆந்திரா அபகரித்த கனக நாச்சியம்மன் கோவிலில், வரும், 2ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக நடத்த, அம்மாநில அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லையில், புல்லு ாரில் உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு உயர்த்தி கட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வ ருகின்றனர்.
கைப்பற்றியது: இந்த தடுப்பணை அருகே, கனக நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது, 50 ஆண்டு களாக தமிழக அறநிலையத்துறை கட்டு ப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. தடுப்பணை விவகாரத்தை அடுத்து, இந்த கோவிலை ஆந்திர மாநில அறநிலையத்துறை கைப்பற்றியது.
வசூல் நடத்த...: முதற்கட்டமாக, இந்த கோவிலுக்கு வரும் வாகனங்களிடம், சுங்க வசூல் நடத்த ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ÷ காவிலில் இருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு, ஆந்திர மாநில மின் வாரியம் சார்பில், இணைப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன், இந்த கோவில் நிர்வாகத்துக்கு, 13 பேர் கொண்ட அறங்காவலர்களை, ஆந்திர அறநிலையத்துறை நியமித்தது. அதில், ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல்வர் பங்கேற்கிறார்: இந்நிலையில், கனக நாச்சி யம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா, ஆகஸ்ட், 2ம் தேதி நடைபெறும் என்று ஆந்திர மா நில அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதில், குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மின் வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பர் என்று அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர். பி ரச்னைக்குரிய கோவில் திருவிழாவுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்க வருவது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.