செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சிவசுப்பிரமணியருக்கு பால் மற்றும் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து காவடி அபிஷேகமும், மிளகாய் பொடி அபிஷேகம், மார் மீது மாவு இடித்தல், மழுவேந்தல், செடல் சுற்றுதல் மற்றும் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து காவடி ஊர்வலம், அலகு குத்திய பக்தர்கள் தேர் மற்றும் ÷ வன்களை இழுத்து வந்தனர்.