பதிவு செய்த நாள்
01
ஆக
2016
12:08
விருத்தாசலம்: விருத்தாசலம், செல்லமுத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 5ம் தேதி துவங்குகிறது. விருத்தாசலம், வடக்குப் பெரியார் நகர், ஆதிசக்தி விநாயகர், செல்ல முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் செடல் உற்சவம் துவ ங்குகிறது. தினசரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 12ம் தேதி மணிமுக்தாற்றில் புனித நீர் சக்தி கரகம் எடுத்து, பால்குடம் சுமந்து, தீச்சட்டி ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். 13ம் தேதி பகல் 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 14 தேதி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, 11:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவடைகிறது.