பதிவு செய்த நாள்
01
ஆக
2016
12:08
திண்டிவனம்: சாரம் சித்தி விநாயகர் சுவாமி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த சாரம், சித்தி விநாயகர் சுவாமி கோவிலில், கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை கலச பூஜை, லட்சுமி ஹோமம், கணபதி ÷ ஹாமம், நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. திண்டிவனம் தண்டபாணி அய்யர் தலைமையில், மணி, ராமசுப்பு ஆகியோர் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் கங்காதரன், குமரவேல், பாலன், விஜயராகவன், வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.