குருவித்துறை: குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்கியது. குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடபெயர்ச்சியாவதை முன்னிட்டு, பக்தர்கள் குருபகவானுக்கு சிறப்புபூஜை செய்தனர். பட்டர்கள் ரங்கநாதர், பாலாஜி சடகோபன் முன்னிலை வகித்தனர். நாளை (ஆக.,2) காலை 7.30 மணி மஹாயாகத்துடன் லட்சார்ச்சனை நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.