திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சர்வ சித்தி விநாயகர் கோயிலில் வெயில் உகந்த அம்மன் முளைப்பாரி உற்சவ விழா நடந்தது. முதல்நாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி எடுத்து வெயில் உகந்த அம்மன் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்தனர். மறுநாள் பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா குழுவினர் ஏற்பாடுகள் செய்தனர்.