அன்னுார்: கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நாளை நடக்கிறது. கோவில்பாளையத்தில், பாடல் பெற்ற, பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி சன்னதியில், குருபெயர்ச்சி விழா நாளை (2ம் தேதி) நடக்கிறது. காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கி, 9:00 மணிக்கு நிறைவடைகிறது. 9.30 மணிக்கு குருபெயர்ச்சி நடக்கிறது. பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மகா தீபாராதனை நடக்கிறது. காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலரும், விழா குழுவினரும் செய்து வருகின்றனர்.