பதிவு செய்த நாள்
01
ஆக
2016
01:08
கோவிந்தவாடி: கோவிந்தவாடி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, சுகாதார பணிகள் மற்றும் பிற கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, 53 பணியாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் நியமித்துள்ளார். வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், நாளை, குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சுகாதாரம் மற்றும் பிற பணிகளை கண்காணிப்பதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு உதவிப்பொறியாளர், ஆறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எட்டு ஊராட்சி செயலர்கள், 13 ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், 23 துாய்மை காவலர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள் என, 53 பேரை, வட்டார வளர்ச்சி அலுவலர் நியமித்து உள்ளார். இவர்கள் இன்று முதல், 4ம் தேதி வரை பல விதமான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.