பதிவு செய்த நாள்
20
செப்
2011
11:09
சாத்தான்குளம் : அதிசயபுரம் தூய மிக்கேல் அதிதூதரின் ஆலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 27 மற்றும் 28ம் தேதிகளில் சப்பரபவனி நடக்கிறது. சாத்தான்குளம் தாலுகா அரசூர் பஞ்.,அதிசயபுரத்தில் புதுமை புரியும் தூய மிக்கேல் அதிதூதரின் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை சகாயராஜ் ராயன் தலைமையில் கொடியேற்ற விழா நடக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பங்குத்தந்தை ஜெயகர் மறையுரை ஆற்றுகிறார். திருவிழா நவநாட்களில் பங்குத்தந்தைகள் செட்டிவிளை செல்வஜார்ஜ், திசையன்விளை டொமினிக், உவரி லாரன்ஸ், காந்திநகர் ரஞ்சித் கர்டோஸா, கூடுதாழை ஜேம்சு விக்டர், கூட்டாம்புளி ராபின், கூட்டப்பனை செட்டிரிக், பெரியதாழை குழந்தைராஜன் மற்றும் தொண்டர்கள் சந்திஸ்டன், அகிலன், ரோஜர் ஆகியோர் தலைமையில் திருயாத்திரை, திருப்பலி மாலையில் ஜெபமாலை, பிரார்த்தனை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. 27 மற்றும் 28ம் தேதிகளில் மிக்கேல் அதிதூதரின் உருவ சப்பரபவனியும், 29ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், 30ம் தேதி மாலை பாதுகாவலரின் அசனவிழா நடக்கிறது. இரவு கலையரங்கில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சில்வெஸ்டர், கோவில் திருவிழா நிர்வாகக் கமிட்டியினர் சாந்த அந்தோணி, ஜெர்சன், ஆல்வின், டென்சிங் மற்றும் ஊர்நலக்கமிட்டியினர் செய்துள்ளனர்.