விருத்தாசலம்: விருத்தாசலம் பாலாஜி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர், பாலாஜி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் 10ம் ஆண்டு செடல் உற்சவ விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் வீதியுலா நடந்தது. 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி பூஜைகள் செய்தனர்.