திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் அங்காளம்மனுக்கு பக்தர்கள், 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு திருக்கோவிலுார், கீழையூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.