அரூர்: அரூரில், சந்தைமேடு கோட்டை காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதேபோல், கடைவீதி உள்ளூர் மாரியம்மன், கருமாரியம்மன், புத்து மாரியம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் திருவிழா மற்றும் சுவாமிகளுக்கு வளைகாப்பு வைபவம் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், சுவாமிகளுக்கு குத்துவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.