பதிவு செய்த நாள்
08
ஆக
2016
02:08
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழுஅபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 10 நாள் ஆடிப்பூர உற்சவம், கடந்த, 27ம் தேதி தொடங்கியது; 2ம் தேதி திருத்தேர் உற்சவமும், 5ம் தேதி சங்குதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்து நிறைவடைந்தது. பின், திரிபுரசுந்தரி அம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு, 8:30 முதல், 10:30 மணி வரை முழு அபிஷேகமும், 10:30 மணிக்கு மேல் அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடந்தது. பின், பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுவாமி, அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.