பழங்கால காசி விசுவநாதர் கோவிலில் பழந்திருக்கோவில்கள் சங்கம் திருப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2011 11:09
சிதம்பரம்:சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில் பழந்திருக்கோவில்கள் திருப்பணிச் சங்கம் சார்பில் பராமரிப்பு பணிகள் துவங்கியது. சேத்தியாதோப்பு அருகே பாளையங்கோட்டை கீழ்பாதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோயில் மிகவும் சிதிலம் அடைந்தது. பழந்திருக்கோவில்கள் திருப்பணிச்சங்கம் சார்பில் சென்னையில் இருந்து 108 சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பனசைமூர்த்தி பழமையான கோவிலை பராமரிக்க வேண்டியதன் அவசியம் பற்றி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் ராஜ்மோகன், பொரு ளாளர் மாசிலாமணி, செயலர் சூரியநாராயணன், ஊராட்சித் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணி வேலைகள் சிறப்புற நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது. கோயில் அர்ச்சகருக்கு சங்கத்தின் சார்பாக 500 ரூபாய் மாதந்தோறும் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.