புள்ளலூர்: படவேட்டம்மன் கோவிலில், மூன்று நாள் ஆடித்திருவிழா நிறைவு பெற்றது. புள்ளலூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் அம்மனுக்கு மூன்று நாள் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டும், அதுப�ோல நடை பெற்றது. 4ம் தேதி துவங்கி, 7ம் தேதி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகளுடன் நடை பெற்றது.